News Just In

8/30/2024 04:44:00 AM

புத்தளம் பைஸானா பைரூஸ் எழுதிய டுவென்டி பிளஸ் நூல் வெளியீடு!

மூதூர் ஜே.எம்.ஐ. வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட புத்தளம் பைஸானா பைரூஸ் எழுதிய டுவென்டி பிளஸ் (20+ ) நூல் வெளியீடு


(அஸ்ஹர் இப்றாஹிம்)
பைஸானா பைரூஸ் எழுதிய டுவென்டி ப்ளஸ் (20+ ) நூல் வெளியீடு தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஒன்றுகூடல் மண்டபத்தில் பல்கலைகழக கலாசார பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஷில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் யு.எல்.அப்துல் மஜீத் கலந்து கொண்டதோடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நூலாசிரியருக்கு இளம் கவிஞருக்கான விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது

No comments: