பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்குவதற்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால் வேட்பாளராக களமிறங்க தம்மிக்க பெரேராவுக்கு என்ன தகு உள்ளது என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கே ஆதரவு
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த நெருக்கடியான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணிலுக்கு, 2 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் ஆதரவு வழங்கியிருந்தோம்.
தற்போது, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும் 15ஆம் திகதி அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணிலுக்கு தங்களது ஆதரவை வழங்க தயாராகி வருகின்றனர்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கட்சியை விட்டு வெளியேறுவார்கள்.
இந்தநிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வேறு சிலரும் வரவுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவில் கட்சியின் செயலாளர் மாத்திரமே எஞ்சியிருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
No comments: