News Just In

8/12/2024 10:33:00 AM

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்!

நூருல் ஹுதா உமர்

திருக்கோணமலை மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றிய சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எல் மஹ்ரூப் அம்பாறை மாவட்டத்தின் பிரதான கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதம கணக்காளர் மஹ்ரூப் 1999/05/17 இல் கணக்காய்வாளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 2002ம் ஆண்டு 02ம் ஆண்டு 01ம் திகதி இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து அம்பாறை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை, உகன, தகன ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியதுடன் இவர் கணக்காளர் சேவையில் தரம் 1ற்கு 2012ம் ஆண்டில் இருந்து தரம் உயர்த்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு 2ம் மாதம் 17ம் திகதி முதல் திருக்கோணமலை மாவட்ட பிரதான உள்ளக கணக்காய்வாளர் ஆக பல்வேறு பதவிகளிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: