News Just In

8/03/2024 08:26:00 PM

ஜனாதிபதியின் யாழ் விஜயம் – நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி!




யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மேலும் இதன்போது ஜனாதிபதிக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது

இதேவேளை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

அத்துடன் யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் , இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வசாவிளான் பிரதேச விடுவிப்பு, இன்டிகோ விமான சேவையை ஆரம்பித்தல், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க இன்று முற்பகல் பங்கேற்றிருந்த நிகழ்வொன்றின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்

No comments: