News Just In

8/17/2024 02:02:00 PM

யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை!




யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நீண்ட நேர சத்திர சிகிச்சையின் பின் வெற்றிகரமாக கை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனின் கையே இவ்வாறு சத்திர சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: