News Just In

8/28/2024 08:28:00 PM

பட்டிருப்பு தேசிய பாடசாலை பழைய மாணவர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு

பட்டிருப்பு தேசிய பாடசாலை பழைய மாணவர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடியில்2001 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி கற்ற பழைய மாணவர்களால் தரம் 09 மாணவர்களின் வகுப்பறைக் கட்டிடமானது மூன்று லட்சத்து முப்பதாயிரம் ரூபா செலவில்
அவர்களாலேயே புனரமைப்புசெய்யப்பட்டு மாணவர்களினது
கற்றல் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (28) கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தரம் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments: