News Just In

8/26/2024 07:36:00 PM

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு ஸைனிங் ஸ்டார்ஸ் அமைப்பினால் கணினிகள் வழங்கி வைப்பு!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலத்திற்கு 2 கணினிகள் வழங்கி வைப்பு


(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.எச்.யூ.றினூபா அவர்களின் முயற்சியின் பலனாக கல்முனை ஸைனிங் ஸ்டார்ஸ் அமைப்பினால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்காக இரண்டு கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.

திருமதி தஸ்னீம் காரியப்பர் மற்றும் திருமதி. பஸீரா றியாஸ் ஆகிய ஸ்தாபக தலைவிகளினால் நிருவகிக்கப்படுகின்ற இவ்வமைப்பானது கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றது.

பாடசாலை அதிபர் எம். எஸ்.எம். ஆரிப் தலைமையில் திங்கட் கிழமை (26) இடம்பெற்ற காலை ஆராதனையின் போது கணினிகள் கையளிக்கப்பட்டன.

ஸைனிங் ஸ்டார்ஸ் அமைப்பின் சார்பாக அதன் ஸ்தாபக தலைவிகளுள் ஒருவரான திருமதி.பஸீரா றியாஸ் , அதன் உறுப்பினர்களான திருமதி. றிஸ்னா ஜஹான்,திருமதி பெரோஷா காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டு கணினிகளை வழங்கி வைத்தனர்.

No comments: