News Just In

8/09/2024 08:42:00 AM

நுவரெலியாவில் அடிப்படை வசதிகழற்ற அதி கஷ்டப் பிரதேச பாடசாலை கரப்பந்தாட்ட அணி தேசிய மட்ட போட்டிக்கு தகுதி!



அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நுவரெலியா மாவட்ட அதி கஷ்டப் பிரதேச பாடசாலை அணி தேசிய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றது.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மத்திய மாகாணத்தின் 15 கல்வி வலயங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 45 அணிகள் பங்குபற்றின.

இப்போட்டியில் நுவரெலியா கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலய அணி கரப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இப்பாடசாலை நுவரெலியா கல்வி வலயத்தில் காணப்படும் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற அதி கஷ்டப் பிரதேச பாடசாலை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: