News Just In

8/13/2024 02:29:00 PM

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவனுக்கு கெளரவம்!

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட மாவடிப்பள்ளி அல் அஸ்றப் மாணவன் வை.எம்.ஹக்கீம் பாராட்டி கெளரவிப்பு


(அஸ்ஹர் இப்றாஹிம்)

தேசியமட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 6ஆம் தர மாணவன் வை.எம்.ஹிக்காமை கௌரவிக்கும் நிகழ்வு மாவடிப்பள்ளி அல் அஸ்றப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். றஜாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச் றியாஸா , காரைதீவு கோட்டக்கல்வி பணிமனையின் பணிப்பாளரும் கணிதப் பாட பிரதி கல்வி பணிப்பாளருமான ஏ .சஞ்சீவன் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள், மாணவன் வை.எம்.ஹக்கீமின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: