News Just In

8/06/2024 01:51:00 PM

பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!!




ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வெற்றிடமாக உள்ள பதவி

இதற்கமைய வெற்றிடமாக உள்ள குழு பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச, இதுவரை காலமும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கும் நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெலும் பொக்குண அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுக்கு அனுமதி கிடைக்காததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதன்படி, குறித்த நிகழ்வு நாளை காலை பொது பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தப்படுவதால் நெலும் பொக்குண அரங்கம் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments: