News Just In

8/16/2024 11:15:00 AM

மட்டக்களப்பு கிரானில்காட்டு யானை தாக்கியதில்விவசாயி உயிரிழந்தார்!




மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின தந்தையான 62 வயதுடைய மா.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம், வழமை போல மாடுகளை மேய்த்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, யானையின் தாக்குதலுக்கு இவர் இலக்காகியுள்ளார்.

இவரது சடலம் நேற்றைய  தினம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை மேற்கொண்ட கோறளைப்பற்று திடிர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்ஆனந்தன் உயிரிழந்தவரின் சடலத்தை உடற் கூற்றாய்வு செய்யுமாறு
சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தார்.

No comments: