News Just In

8/04/2024 01:26:00 PM

இலங்கையில் களமிறக்கப்படும் 50 ஆயிரம் பொலிஸார் மற்றும் இராணுவம்!

இலங்கையில் தேர்தல் கடமைகளுக்காக 50 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அனுப்புவது தொடர்பான தகவல் அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கணிசமான அளவில் இராணுவ வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments: