(அஸ்ஹர் இப்றாஹிம்)
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் ,தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி 20 வயதுப் பெண்கள் அணி சம்பியனானது.
யாழ்ப்பாணம் அருணோதயக் கல்லூரி மைதானத்தில் 18ஆம் திகதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு மத்திய கல்லூரியைச் சந்தித்த மகாஜனா 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.இவ்வருடத்துடன் மகாஹனா கல்லூரி 20 வயதுப் பெண்கள் அணி தொடர்ந்து 9 ஆவது வருடங்களாக சம்பியன்களாக வலம் வருகின்றது.
2014 ஆம் ஆண்டு தொடக்கம் சம்பியன்களாக வலம் வருகின்றது. 2020, 2021 வருடங்கள் கொவிட் 19 தொற்றுநோய் காரணமக போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: