(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள சுற்றுலாத் தளமாக மட்டக்களப்பு கோட்டை விளங்குகின்றது.வரலாற்றுத் தொன்மை வாய்ந்த விடயங்களில் ஏராளமானவை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றன.
இதுவரை காலமும் இந்தக் கோட்டையினுள் அமைந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பிறிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து இந்த இடத்தினை சுற்றுலாத் தளமாக மெருகூட்டியுள்ளனர்.
முன்னைய நாட்களிலும் இது ஒரு சுற்றுலாத்தளமாக இருந்தாலும் மக்களினுடைய வருகை என்பது குறைவாகவே காணப்பட்ட நிலையில் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதேவேளை பண்டைய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துகின்ற நூதனசாலையாகவும் இந்தக் கோட்டை மாற்றம் பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
No comments: