(அஸ்ஹர் இப்றாஹிம்)
மன்னார் கல்வி வலயத்துக்கு உட்பட்ட 82 பாடசாலைகள் கலந்து கொண்ட தடகள விளையாட்டு போட்டி நிகழ்வுகள் அண்மையில் முருங்கன் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது மன்னார், நானாட்டான் டி லா சால் கல்லூரி பல படைத்த சாதனைகளை படைத்துள்ளது.
2023 ம் ஆண்டில் 151 புள்ளிகளை பெற்று பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தை இப்பாடசாலை பெற்றுக் கொண்டதோடு, .2024 ஆண்டில் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் 191 புள்ளிகளைப் பெற்று சென்ற முறையை விட 40 புள்ளிகள் மேலதிகமாக பெற்று அதே முதல் நிலையை இப்பாடசாலை தக்க வைத்துள்ளது .
ஆண்கள் பிரிவில் மொத்த புள்ளிகள் 99 பெற்று ஆண்கள் பிரிவில் 5ம் நிலையினை பெற்றுள்ளது.
20 வயது பெண்கள் பிரிவு வலைப்பந்தாட்டத்தில் முதலிடத்தையும், 18 வயது பெண்கள் பிரிவு வலைப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தையும்,16 வயது பெண்கள் பிரிவு வலைப்பந்தாட்டத்தில் மூன்றாம் இடத்தையும்,20 வயது ஆண்கள் பிரிவு உதைபந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தையும்,16 வயது ஆண்கள் பிரிவு உதைபந்தாட்டத்தில்மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

No comments: