News Just In

7/05/2024 07:15:00 PM

சம்பந்தனின் அஞ்சலி இடத்துக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல்!




கிளிநொச்சி - அக்கராயன் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மறந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின்நினைவிடத்திற்குபொலிஸாரினால்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் மரணம் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கருப்புகொடிகளை அகற்றுமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இது ஒரு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை எனவும், தமிழ் தலைவர்களுக்கு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், பொலிஸாரின் அராஜகமும், மிலேச்சத்தனமா செயற்பாட்டை இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments: