வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுமாயின் வாகனங்களின் விலையும் பெருமளவில் குறைவடையும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் அந்நிய செலாவணி பற்றாக்குறையால், வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அத்தியாவசிய வாகனங்களுக்கான தடை படிப்படியாக தளர்த்தப்பட்டதுடன், அடுத்த சில மாதங்களில் ஏனைய வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் மற்றும் அந்நிய செலாவணி அதிகரிப்பின் காரணமாக இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்க முடிந்தது மற்றும் அரசாங்கம் விரும்பிய இலக்குகளை அடைய முடிந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காலவரையின்றி அதிகரித்துள்ள வாகனங்களின் விலைகள் வாகன இறக்குமதியுடன் பெருமளவு குறையும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: