News Just In

7/25/2024 01:05:00 PM

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராமத்தில் புதிய சந்தை ஆரம்பித்து வைப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட பிரதேசத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் அனுமதியோடு கிராம அபிவிருத்தி அமைப்பின் முயற்சியில் பொலிவேரியன் மக்கள் சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இக் குடியேற்ற திட்ட கிராம மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கான பொருட்கள், மரக்கறிகள்,இறைச்சி மற்றும் மீன் வகைகளைப் பெறுவதற்காக தூர இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இதனால் நேர விரயமும் பணச் செலவும் தமது பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக கிராம அபிவிருத்தி சபையிடம் முறையிட்டதனை தொடர்நது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் அனுமதியுடன் இந்த பொலிவேரியன் சந்தை நேற்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

No comments: