
இலங்கையின் மிகப் பழமையான விமான நிலையமான ஹிகுரக்கொட உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நடவடிக்கைகளுக்காக நவீனமயப்படுத்த தேவையான நிர்மாணப் பணிகள்நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டன.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.
இலங்கையின் 5வது சர்வதேச விமான நிலையமான இதன் ஓடுபாதை அபிவிருத்தியை 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மொத்த அபிவிருத்திச் செலவு 17 பில்லியன் ரூபாவாகும்.
No comments: