கிண்ணியா பிரதேசத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோஸ்தர்கள் மருந்தகங்களில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில்ஆறு மருந்தகங்களிலிருந்து காலாவதியான மருந்துப் பொருட்கள் கண்டுபிடிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான மருந்துப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 6 மருந்தகங்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சபையின் உயர் அதிகாரிகாரியொருவர் தெரிவித்தார்.
திருகோணமலை நீதவான் நிதிமன்றத்தில் கடந்த புதன் கிழமை (24) வழக்கு தொடரப்பட்ட நிலையில்,தலா 10,000 ரூபா தண்டப்பணமும், 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கிய நீதவான்,மீண்டும் ஒரு முறை இக்குற்றத்தை செய்யுமிடத்து 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என மன்றில் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: