News Just In

7/05/2024 05:45:00 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம், சஜித்தால் திறந்து வைப்பு!





ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம் இன்று மாலை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு வருகைதரும்போது கட்சி அலுவலகத்திற்கு வருகைதந்து ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய எதிர்க்கட்சி தலைவர் பொதுமக்களின் கோரிக்கை கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.

No comments: