News Just In

7/30/2024 06:38:00 PM

கோர விபத்தில் பெண்ணின் தலை துண்டாடப்பட்டது!




அனுராதபுரம்(Anuradhapura) நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நொச்சியாகம நகரின் மத்தியில் இன்று(30) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கவனக்குறை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சாரதியின் போட்டித்தன்மை காரணமாக ஓட்டிச் சென்ற சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: