(எஸ்.அஷ்ரப்கான்)
48 வது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அன்மையில் இடம்பெற்றது.
இதில் மாகாண மட்ட தடகள போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டியில், ஒலுவிலை சேர்ந்த பி.எம். நெளசாத் ஐந்து தங்கப்பதக்கம் ஒரு வெள்ளிப்பதக்கம் உள்ளடங்களாக ஆறு பதக்கங்களை சுவீகரித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
400 மீற்றர் ஓட்டம் - தங்கப் பதக்கம்,
400 மீற்றர் சட்ட வேலி ஓட்டம் - தங்கப் பதக்கம்,
100 மீற்றர் ஓட்டம் - வெள்ளிப் பதக்கம்,
4 × 400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் - தங்கப் பதக்கம்
4 × 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் - தங்கப் பதக்கம்
4 × 400 மீற்றர் மிக்ஸ் றிலே (Mix really) - தங்கப் பதக்கம் ஆகியவற்றில் மேற்படி பதக்கங்களை பெற்றுக் கொண்டார்.
No comments: