News Just In

7/23/2024 11:40:00 AM

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட 16 பேர் கைது!




மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் நடாத்திய யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் கடந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ் ரமேஷ் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பெண்ணுடன் எட்டு பேர் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி பிரதேசங்கலிருந்து சுமார் 40 லீற்றர் கசிப்புடன் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீத மன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப் பொருள்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: