News Just In

6/26/2024 02:05:00 PM

ஆசிரியர் சங்க போராட்டத்தில் பெரும் பதற்றநிலை!



இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பதற்றநிலையானது தொடர்வதாகவும் களத்தில் இருந்து கிடைக்கும்   செய்திகள்  தெரிவிக்கின்றன 

இதன்போது தாக்குதலையும் மீறி ஆசிரியர்கள் பின்வாங்காமல் போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி இலங்கை ஆசிரியர் சங்கமானது போராட்டத்தை தொடர்ந்துவரும் நிலையில், பொாலிஸார் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவானது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: