News Just In

6/18/2024 06:27:00 PM

ஜனாதிபதிக்கு எதிராக திரும்பிய அரசியலமைப்புச் சபை!

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு நிராகரிப்பு!





சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை ஆறு மாதங்கள் நீடிக்கும் முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு சபைக்கு வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று அரசியலமைப்பு சபை கூடிய போதே ஜனாதிபதியின் பிரேரணையை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் எதிர்வரும் 26ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரது சேவைக்காலத்தில் 6 மாதங்கள் நீடிக்கும் யோசனையை ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: