News Just In

6/02/2024 05:11:00 AM

சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம் !




யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.

யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: