News Just In

6/07/2024 06:17:00 AM

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!




நாட்டில் இன்று முதல் (06) நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச  நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை கௌபி, சிவப்பு கௌபி, காய்ந்த மிளகாய், நெத்தலி, கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து லங்கா சதொச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக

உருளைக்கிழங்கு 75 ரூபா குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

வெள்ளை கௌபி 110 ரூபாவினால் குறைப்பட்டு 990 ரூபாவிற்கும் சிவப்பு கௌபி 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 950 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவிற்கும், நெத்தலி 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 930 ரூபாவிற்கும் விற்கப்படும்.

அத்துடன் கடலைப் பருப்பு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதேச நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: