News Just In

6/19/2024 10:01:00 AM

எதிர்காலத்தில் போன்களே இருக்காது!

“எதிர்காலத்தில் போன்களே இருக்காது, நியூராலிங்க் மட்டுமே” - எலான் மஸ்க் கணிப்பு




எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது என்றும் வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், “எண்ணங்களின் மூலம் உங்கள் ஃபோனைக் கட்டுப்படுத்த அனுமதிக்க, உங்கள் மூளையில் நியூராலிங்க் இன்டெர்ஃபேஸ்-ஐ பொருத்துவீர்களா?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “எதிர்காலத்தில் போன்களே இருக்காது. நியூராலிங்க் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது

அண்மையில் அந்த சிப்பை பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக் எனும் நபர் அந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். “எல்லோரையும் போல என்னால் கணினியை இயக்க முடிகிறது” என அவர் தெரிவித்தார். அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.



















No comments: