News Just In

6/18/2024 03:03:00 PM

அரச வைத்தியசாலைகள் மீதான மக்களின் நாட்டம் அதிகரிப்பு!





பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டம் காட்டுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பிரஜை ஒருவர் வருடத்திற்கு சுமார் ஆறு தடவைகள் வைத்தியசாலைக்கு வருகை தந்து மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொள்கின்றார்.

முதியோர்களை அதிகளவில் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகின்றது. பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ சேவைகளைப் பெற நாட்டம் காட்டி வருகின்றனர்.

எனவே வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலப்படுத்தப்பட்டால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை குறைக்கலாம்.

மேலும் சிகிச்சை காலத்தை அதிகரிப்பதன் ஊடாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்” இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால மேலும் தெரிவித்துள்ளார்

No comments: