
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரலிதரன் மற்றும் உயர் அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
No comments: