அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச சேவை தொழிற் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக அரச, அரை அரச, தோட்ட மற்றும் மாணவர் சமூகங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக சங்கத்தின் இணை அமைப்பாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில் அரச நிறுவனங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments: