News Just In

5/22/2024 11:27:00 AM

யாழில் பாண் சாப்பிட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!



யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: