கொழும்பு காலிமுகத்திடலில் கட்டப்பட்டுள்ள (ITC ரத்னதீப) என்னும் மாபெரும் அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.
இந்த நட்சத்திர ஹோட்டல் எதிர்வரும் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா என்ற துணை நிறுவனத்தின் கீழ், இந்த ஹோட்டல் இயங்குகிறது.
சுமார் 3,000 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்கு குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
No comments: