News Just In

4/01/2024 10:46:00 AM

நடப்பு சம்பியன் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது டெல்லி ; தோனியின் கடைசி நேர அதிரடி பலனளிக்கவில்லை



விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 13ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 20 ஓட்டங்களால் டெல்லி  கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் சகலதுறைகளிலும் சென்னை சுப்பர் கிங்ஸை விஞ்சிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இந்த வருடம் முதலாவது வெற்றியை சுவைத்தது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் தோனி அதிரடியில் இறங்கிய போதிலும் அதனால் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு பலன் கிட்டவில்லை.

டெல்லி  கெப்பிட்டல்ஸ் சார்பாக 6 வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட 7 பந்துவீச்சாளர்கள் மிகவும் சாதுரியமாக பந்துவீசி டெல்லி யின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்லி  கெப்பிட்டல்ஸ், முன்வரிசை வீரர்களின் அதிரடிகளின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது.

No comments: