News Just In

4/09/2024 07:46:00 PM

புகைத்தலை விட அலுவலக வேலை அதிக ஆபத்தை ஏற்படுத்துமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!




பொதுவாகவே தற்காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

ஆனால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது புகைப்பிடிப்பதற்கு சமமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காலையில் எழுந்ததிலிருந்து பல மணி நேரங்கள் அலுவலகத்திலும், கார்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறு ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் பற்றியும் அதனை எவ்வாறுளு தவிர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.

இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், நிற்கும் போது முதுகில் ஏற்படும் அழுத்தத்தை பார்க்கிலும் அதிகமான அழுத்தம் ஏற்படுகின்றது.

இவ்வாறு நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பதனால் மன அழுத்தமும் அதிகரிக்கின்றது. இதனால் இரவில் தூங்கமின்மை பிரச்சினை ஏற்படுகின்றது.

ஆறு முதல் எட்டு மணி நேரங்களுக்கும் மேலாக எந்த இடைவேளையும் இன்றி ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் ஆரோக்கியம் எதிர்பார்க்காத அளவு பாதிக்கப்படுகின்றது.

இப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் முதலில் நம்முடைய கலோரிகள் எரிக்கப்டும் வீதம் குறைவடைகின்றது.

இதனால் உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ரால் பிரச்சினை, டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் போன்ற பாரிய பாதக விளைவுகள் ஏற்படுகின்றன.

அலுவலகத்தில் அல்லது எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது எழுந்து நடமாட வேண்டியது அவசியம்.

சிறு சிறு வேலைகளுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்காமல் எழுந்து நடக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

முதுகு, கழுத்து, தோள்கள் மற்றும் கண்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படாதவாறு அமர்ந்திருக்கும் கதிரை மற்றும் மேசையை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

கை மற்றும் கால்களை அவ்வப்போது நீட்டி, வளைத்து அசைத்துக் கெள்ள வேண்டியதும் மிக்கியமாகின்றது.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்வது நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இன்றியமையாதது

No comments: