பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியிலுள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.
இந்த நிலையில் கிளிகளுடன் புகைப்படங்கள் எடுப்பதற்காக வட மாகாணத்திலிருந்து மக்கள் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்து செல்வது வழக்கம்.
இவ்வாறு ஹம்பாந்தோட்டையை நோக்கி செல்லும் மக்களின் கவனத்தை தற்போது றீ(ச்)ஷா பண்ணையின் 'அவந்திகை அகம்' என்ற கிளிகள் சரணாலயம் ஈர்த்துள்ளது. மக்களின் கண்கவரும் பல இடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் நாவை சுண்டி இழுக்கும் சுவை மிகு உணவுகள் என எதற்குமே றீ(ச்)ஷா பண்ணையில் குறைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் இப்போது மக்களுடன் கொஞ்சி விளையாடும் கிளிகள் மக்களை மேலும் மேலும் கவர்ந்த இழுக்கின்றன.
புதுவருட விடுமுறையை அடுத்து மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
No comments: