News Just In

4/08/2024 08:06:00 PM

38வது தேசிய மாணவர் சிப் பாய் படைப்பிரிவின் பதவி உயர்வு விருது வழங்கும் நிகழ்வு!



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
38வது தேசிய மாணவ சிப்பாய்கள் படைஅணியி ன் பதவி உயர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இவ்வணியின் மட்டக் களப்பு மாவட்ட முகாமில் படைஅணியின் இணைப்பு அதிகாரி லெப்டி னன் கேணல் ஜி.டபிள்யு .நிலாந்த தலைமையில் இடம் பெற்றது .

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவசிப்பாய் படைப்பிரிவின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வைபவரீதியாக வழங்கி வைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மெதடிஷ்த மத்திய கல்லூரி தேசிய மாணவர் சிப் பாய் படை அணியினரின் விசேட ஆயுத அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது . வல ய கல்விப் பணி ப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இது பற்றி இங்கு பிரதமதியா கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா புலேந்திர குமார் கருத்து வெளி யிடுகையில்;- பாடசாலை மாணவர்களை கற்றல் நடவடிக் கைகளில் மாத்திரம் ஈடுபடுத்தாது புறக்கிருத்திய செயல்பாடுகளிலும் ஈடுபடுத் தி மாணவர்களை முழுமையான நிலைக்கு உயர்த்துவதற்கு பெற் றோர்கள் முன் வரவேண்டும்.

அந்த வகையில் இந்த சிப்பாய்படை அணியின்பணியில் ஈடு படு வதற்கு முன் வ ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் களுக்கு இந்த மாகாணத்தின் பணிப்பாளர் என்ற ரீதியில் மன முவந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் இந்த படை அணியில் பாடசாலை மாணவர்கள் இணைந்து தமது திறமைகளை வளர்த்து எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தலைமைத்துவத்தை கொண்டு வரும் பிரிவினராக வளர்ச்சி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் .

இதன்போது அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு கல்குடா பட்டி ருப்பு மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மேற்கு பாடசா லைகளில் இருந்து தெ ரிவு செய்யப்பட்ட இந்த மாணவர் சிப்பாய் படை அணி யினருக்கு இந்த பதவி விருதுகள் ,சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்கால சந்ததிக்குந்த பிரஜைகளை உருவாக்கும் விசேட திட்டத் தின் கீழ் அன்றைய இளைஞர் விவகார அமைச்சர் இன்றைய ஜனா திபதி ரணில் விக்ரமசிங்கவினாலேயே இந்த மாணவர் சிப்பாய் படை அணி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

No comments: