News Just In

3/04/2024 04:09:00 PM

மட்டக்களப்பு குருமன்வெளி வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!


மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி - குருமன்வெளி பகுதியில் இன்று(04) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், குறித்த இளைஞர் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய இளைஞர் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

No comments: