News Just In

3/11/2024 02:55:00 PM

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க பாவனையற்று கல்லடியில் காணப்படும் அரச விடுதிக்கு அதிபர் களவிஜயம்!!




மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கல்லடியில் பாவனையற்று காணப்படும் அரச விடுதிக்கு திடீர் களவிஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கடந்த காலங்களில் உபயோகத்தில் இருந்து தற்போது பாவனையற்று இருக்கும் அரச விடுதியை நேற்று (09) திகதி பார்வையிட்டுள்ளார்.

பாளடைந்து பற்றைக் காடாக காணப்படும் அரச விடுதியினை பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் துப்பரவு செய்ய மாவட்ட அரசாங்க அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இவ் விடுதியின் மூலம் அரசிற்கு வருவாய் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளையும் இதன் போது வழங்கியுள்ளார்.

இவ் விடுதியினை விரைவில் புணர்நிர்மானம் மேற்கொண்டு பாவனைக்கு உகந்ததாக மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் எடுப்பதாக இதன் போது கருத்து தெரிவித்துள்ளார்

No comments: