News Just In

2/20/2024 10:58:00 AM

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!




கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நடனம், சங்கீதம், நாடகம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இந்த பிரயோகப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது சொந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி முதல் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: