
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பமாகி உள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16.2.2024) நிறைவடைந்தது.
கல்வி அமைச்சு
அதன்படி, புதிய பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் இன்று (19.2.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
No comments: