News Just In

2/01/2024 03:09:00 PM

க.பொ.த உயர்தர பரீட்சைகள்- விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பில் அறிவிப்பு!





க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் க.பொ.த உயர்தர பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை 2,300 க்கும் மேற்பட்ட பரீட்சை மையங்களில் நடைபெற்றதுடன் இம்முறை 346,976 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்காக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments: