News Just In

2/01/2024 07:01:00 PM

ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய 10 ம் ஆண்டு நிறைவும் சாதனையாளர் கௌரவிப்பு விழா.!




(உமர் அறபாத் -ஏறாவூர் )

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டும்2023ம் ஆண்டு மெய்வல்லுனர் போட்டியில் வெற்றிகளை பெற்றமாணவர்களையும்2023ஆண்டு5ம்தரபுலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பிரதேச கலாச்சார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களையும்கௌரவிக்கும் நிகழ்வு 31/01/2024 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர்.MM ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலை ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் பசீர் சேகுதாவூத் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பனிமனையின் பணிப்பாளர் MS.அமீர் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் மாணவர்களின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.பாடாசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வை அலங்கரித்தமை குறிப்பிடத்தக்கது .


No comments: