
ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை மாவட்டத்தின்,கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள வறுமைக் கோட்டியின் கீழ் வாழும் 100 குடும்பங்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தல் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 13 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு இன்று (12) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
குடி நீரின் தேவையை பூர்த்தி செய்து சுத்தமான குடி நீரினை வழங்கும் நோக்கில் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.
பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த நீரிணைப்பு வழங்கும் நிகழ்வில்நிருவாககிராமஉத்தியோகத்தர்,சமுர்த்திஉத்தியோகத்தர்கள்,முஸ்லிம் எயிட் நிறுவன வெளிக் கள இணைப்பாளர் றமீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments: