கடந்த சுனாமிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலையில் உள்ள குறைநிறைகளை பாடசாலை நிர்வாகத்திடம் ஆராய்ந்ததுடன், மாணவர்களிடம் கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளருமான எம்.என்.எம்.ஏ. மலிக், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரின் பொதுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments: