News Just In

1/01/2024 01:57:00 PM

புத்தாண்டில் சத்தியப்பிரமான உறுதியுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் கடமைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.!




Jana Ezhil

பொது நிர்வாக அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைய இன்றைய (01) புத்தாண்டு தினத்தில் சத்தியப் பிரமாணத்துடன் மட்டக்களப்பு மாநகர சபையின் பணிகள் ஆரம்பமானது.

மாநகர சபையின் பொறியியலாளர் திருமதி சித்திராதேவி லிங்கேஸ்‌வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், இறைவணக்கம் என்பன இடம்பெற்றதுடன், அதனை தொடர்ந்து மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து அரச சேவைக்கான சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் உறுதியுரையும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலும் திணைக்களத் தலைவரின் வாழ்த்து செய்தி, விசேட உரை என்பனவும் இதன் போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. கிரிஜா பிரேம்குமார், ஆயுர்வேத வைத்திய அதிகாரி Dr. பிரதீபா பார்த்தீபன், கால்நடை மருத்துவர் ரி.துஷ்யந்தன், இயந்திரப் பொறியியலாளர் என்.யோகேந்திரன் உட்பட பகுதித் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


No comments: