News Just In

1/31/2024 02:08:00 PM

மாலைத்தீவு – இலங்கை ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!




மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கில்லான் எயார் ஆம்புலன்ஸ் விமான போக்குவரத்து சேவை மார்ச் 1 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாலைதீவு போக்குவரத்து மற்றும் எயார் ஆம்புலன்ஸ் விமான சேவைகள் அமைச்சர் கெப்டன் மொஹமட் அமீனுக்கும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் வசிக்கும் மக்கள் இலங்கைக்கு விரைந்து வந்து விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு விமானப் போக்குவரத்து அமைச்சர், தற்போது வரை, அதன் குடிமக்கள் அவசர சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், இந்த நாட்டில் தற்போதுள்ள அவசர சிகிச்சையின் தரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments: