News Just In

1/16/2024 04:35:00 PM

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா!





கச்சை தீவினை நோக்கி யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பங்குனிமாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையிலேயே குறித்த களவிஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த களவிஜயத்தில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன், கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

No comments: