
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய எம்.பி.க்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் தேர்தல்களில் எந்தவொரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்கவையும், நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஹரிணி அமரசூரியவை முன்னிறுத்துவதற்கும் அக்கட்சி தீர்மானித்துள்ளது.
குறித்த தகவல்களை தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் பலரும் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
No comments: